17-ந் தேதி மின்நிறுத்தம்

மயிலாடுதுறை அருகே 17-ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர், பெரம்பூர் மற்றும் கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் 17-ந் தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூர், மேலமருதாந்தநல்லூர், பொன்மாசநல்லூர், பெரம்பூர், கடக்கம், கிரியனூர், சேத்தூர், முத்தூர், எடக்குடி, பாலூர், கொடைவிளாகம், ஆத்தூர். கடலங்குடி, வானாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை. கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கும் 17-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதைப்போல திருவெண்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் 17-ந் தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம், கோசாலை தெரு, முத்தையா நகர், சாலைக்கார தெரு மற்றும் சாவடிகுப்பம் ஆகிய பகுதிகளில் மட்டும் 17-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.