ஸ்ரீராமபுரம், செம்மடைப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


ஸ்ரீராமபுரம், செம்மடைப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Sept 2023 2:30 AM IST (Updated: 19 Sept 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீராமபுரம், செம்மடைப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செம்மடைப்பட்டி பீடரில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீராமபுரம், போலியமனூர், சி.பி.கே.புதூர், அரசமரத்துபட்டி, ராஜாபுதூர், கட்டசின்னாம்பட்டி, திருமலைராயபுரம், செம்மடைப்பட்டி, நரிப்பட்டி, எல்லைப்பட்டி, காமாட்சிபுரம், குமாரபாளையம், நீலமலைக்கோட்டை, கரியகவுண்டன்பட்டி, புது எட்டமநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கன்னிவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

1 More update

Related Tags :
Next Story