காஞ்சி, நல்லவன்பாளையத்தில் இன்று மின்வினியோகம் நிறுத்தம்
காஞ்சி, நல்லவன்பாளையத்தில் இன்று மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சி, நல்லவன்பாளையத்தில் இன்று மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணமலை மாவட்டம் காஞ்சி, நல்லவன்பாளையம், காரப்பட்டு துணை மின்நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் காஞ்சி துணை மின் நிலைய பகுதிகளான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ் படுர், மேல்படுர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைபாக்கம், கடலாடி, காரப்பட்டு, மட்டவெட்டு மற்றும் சிறுகலாம்பாடி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அதேபோல் நல்லவன்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால் நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமலை, காம்பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மேலும் காரப்பட்டு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம், வீராணந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பணைஓலைப்பாடி, மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு மற்றும் படிஅக்ரகாரம் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இத்தகவலை செயற்பொறியாளர்கள் சங்கரன், வெங்கடேசன் ஆகியோர் தெரிவித்தனர்.
========