விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்புதுணி கட்டி போராட்டம்


விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்புதுணி கட்டி போராட்டம்
x

தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்புதுணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்புதுணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைத்தறிகள்

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறிகள் இயங்கி வருகிறது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்படும். இதுவரை புதிய கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பத்திரகாளியம்மன் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

கண்களில் கருப்பு துணி

இதனை ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் சி.ஐ.டி.யு., தொழிற் சங்கம் சார்பில் காலவரையற்ற போராட்டம் நடைெபற்று வருகிறது. இந்தநிலையில் 11-வது நாளாக நேற்று செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிலையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறிய தாவது:- நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் கோரிக்கைகள் குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.


Next Story