மலர்கள் சாகுபடி குறித்து மாணவர்களுக்கு பயிற்சி


மலர்கள் சாகுபடி குறித்து மாணவர்களுக்கு பயிற்சி
x

தளி கொய்மலர் மகத்துவ மையத்தில் மலர்கள் சாகுபடி குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்திய-இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தின் கீழ் தளியில் செயல்பட்டு வரும் கொய்மலர் மகத்துவ மையத்தில் ஓசூர் மற்றும் தளி சுற்றியுள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 50 மாணவ-மாணவிகளுக்கு மலர் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி கலந்து கொண்டு தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள், மலர்கள் சாகுபடி, உர மேலாண்மை, அலங்கார செடிகள் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்து பயிற்சி அளித்தார். அப்போது மாணவ-மாணவிகள் தோட்டக்கலை மற்றும் மலர்கள் சாகுபடி பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தனர். இந்த பயிற்சியில் தோட்டக்கலை அலுவலர்கள் உடனிருந்தனர்.

1 More update

Next Story