தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
x

நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

நாமக்கல்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 3-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி புதுச்சத்திரம் வட்டார வள மையத்தில் 3 நாட்கள் நடந்தது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் அம்ரு நிஷா, வட்டார கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியம், சந்திரசேகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி வகுப்பை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன், மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் மோகனசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். 3-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியில் இளம் மற்றும் கணித பாடத்தில் உள்ள கருத்துக்கள் செயல்பாடுகள் மூலம் கருத்தாளர்களால் விளக்கப்பட்டது.

இதில் புதுச்சத்திரம் வட்டாரத்திற்கு உட்பட்ட தொடக்க பள்ளிகளை சேர்ந்த 78 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் கருத்தாளர்களாக சிவகுமார், ஜமீன், சவுந்தரநாயகி, கோமதி, வாசுகி, அனுபிரியா, கவிதா பன்னீர்செல்வம், செல்வராஜ், சுதா, செந்தில்குமார் மற்றும் பிரியா ஆகியோர் செயல்பட்டனர்.


Next Story