வனவிலங்குகளை கணக்கெடுக்க பயிற்சி


வனவிலங்குகளை கணக்கெடுக்க பயிற்சி
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனவிலங்குகளை கணக்கெடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்


வால்பாறை

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனவிலங்குகளை கணக்கெடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி ஆகிய 4 வனச்சரக வனப் பகுதியில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கண்காணிப்பு பணி கடந்த வாரம் முடிவடைந்தது.

அதைத்தொடர்ந்து அந்த 4 வனச்சரக பகுதியில் எந்த இடத்தில் புலிகளின் கால்தடம் பதிவு செய்யப்பட்டதோ, புலிகளின் எச்சங்கள் சேகரிக் கப்பட்டதோ அந்த இடத்தில் தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வனவிலங்குகளை கணக்கெடுப்பு பணி வருகிற 23-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

588 கேமராக்கள்

இதற்கான பயிற்சி வகுப்பு நேற்று ஆனைமலை புலிகள் காப்பகம் அட்டகட்டி பகுதியில் உள்ள வனமேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதில், பயிற்சி மைய உதவி வனப் பாதுகாவலர் செல்வம் தலைமையில் விலங்கியலாளர் அன்வர் கண்காணிப்பு கேமராவை மரங்களில் பொருத்துவது, அதற்கான நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.

இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 294 பாதையில் 588 கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட உள்ளது. வருகிற 23-ந் தேதி முதல் 25 நாட்களுக்கு கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. பின்னர் அந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

எச்சங்கள் சேகரிப்பு

கடந்த வாரம் நடைபெற்ற கணக்கெடுப்பின் போது எச்சங்கள் சேகரிக்கப்பட்ட இடத்திற்கும் அந்த வனப் பகுதிக்கும் புலிகள் தொடர்ந்து வருகிறதா என்பதை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக உதவி வனப் பாதுகாவலர் செல்வம் தெரிவித்தார்.


Next Story