பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு உறைவிட மருத்துவர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு உறைவிட மருத்துவர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மருத்துவ மாணவர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணை செயலாளர் டாக்டர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தும் குற்றங்களை தடுக்க அரசு சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story