ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை


ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை
x

ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் கோவிலில் ஆனி மாத பிரதோஷ பூஜை நடைபெற்றது. சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அருகம்புல் மலர் மாலை மற்றும் பல்வேறு வகையான மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் சோமசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story