பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் விஸ்வநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு பிரதோஷ காலத்தில் சூரியவாசல் திறக்கப்படுவது வழக்கம். நேற்று வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள், நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், திரவியம், தேன், பால், இளநீர், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு கூட்டு வழிபாடு நடைபெற்றது. சூரிய வாசல் வழியாக திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் சதீஷ் குருக்கள் செய்தார்.
இதே போல் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி நந்தியம் பெருமானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்தியம் பெருமாளுக்கும், புராதனவனேஸ்வரருக்கும் தீபராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.






