கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் பிரதோச வழிபாடு நடைபெற்றது.

சிவகங்கை

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமையான கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் புரட்டாசி மாத குருவார பிரதோச வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 11 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தொடர்ந்து கமலாம்பிகா சமேத கைலாசநாதர், உலகநாயகி சமேத உலகநாத சாமிகள் ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story