கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

சேலம்

கொண்டலாம்பட்டி:-

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது முன்னதாக பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு இளநீர், சந்தனம், பால், தயிர், நெய் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கரபுரநாதர், பெரியநாயகியுடன் நந்தி தேவர் மீது அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த பிரதோஷ வழிபாட்டில், உத்தமசோழபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரியபுத்தூர், நெய்க்காரப்பட்டி, பூலாவரி, கொண்டலாம்பட்டி, வீரபாண்டி, சிவதாபுரம், வேடுகாத்தான்பட்டி, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story