சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
நன்செய் புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம்உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார்.
அதேபோல் புன்னம், திருக்காடுதுறை, குந்தாணிபாளையம் நத்தமேடு மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காகிதபுரம் குடியிருப்பில் காசிவிஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால், அருகம்புல்களாலும், அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது.
தோட்டக்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய சிவன்கோவில்களில் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் டந்து. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.