பேரிடர் கால முன்னெச்சரிக்கை மாதிரி பயிற்சி
பேரிடர் கால முன்னெச்சரிக்கை மாதிரி பயிற்சி
திருப்பூர்
சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் காலங்களில் பாதுகாத்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீயணைப்புத்துறை சார்பில் மாதிரிபயிற்சி நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அதிகாரி அப்பாஸ், உதவி மாவட்ட அதிகாரி ஜெயசங்கர், சிறப்பு உதவி மாவட்ட அதிகாரி விஜயராஜ், நிலைய அதிகாரிகள் மோகன் (திருப்பூர் தெற்கு), வேலுச்சாமி (அவினாசி) ஆகியோர் கலந்துகொண்டனர்.
தீயணைப்பு வீரர்கள் கியாஸ் சிலிண்டரில் தீப்பற்றினால் எவ்வாறு அணைப்பது, பேரிடர் காலங்களில் உயரமான கட்டிடத்தில் இருப்பவர்களை காப்பாற்றும் முறை, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முறை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முறை உள்ளிட்டவற்றை செய்து காட்டினார்கள். இதை அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.