போலியான தகவல்களை பரப்பும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்-கலெக்டர் சாந்தி எச்சரிக்கை

தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசின் சின்னத்துடன் வாட்ஸ்-அப்பில் அரசின் புதிய ஆணைப்படி பழைய மற்றும் புகைப்படம் இல்லாமல் இருக்கும் சாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக வருகிற 16-ந்தேதிக்குள் மாற்றி கொள்ள வேண்டும் என்று தகவல் பரவி வருகிறது. இதுபோன்ற எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற போலியான தகவல்களை பரப்பும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





