ரெயில் விபத்துகள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி தினகரன்


ரெயில் விபத்துகள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி தினகரன்
x

இனி வரும் காலங்களில்ரெயில் விபத்துகள் ஏற்படா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே தடம் புரண்ட மைசூரு - தர்பங்கா எக்ஸ்பிரஸ்ரெயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது துரதிஷ்டவசமானது.

ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து பயணிகளும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கும் இதே நேரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற ரெயில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்

1 More update

Next Story