சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை - தமிழக அரசு அரசாணை வெளியீடு


சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை - தமிழக அரசு அரசாணை வெளியீடு
x

சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தெருவோர தள்ளுவண்டி கடைகள் நடத்துவதில் தகுதி உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திடவும், இத்திட்டத்தினை தற்போதைய நிதி ஆண்டிலேயே தொடர்ந்திட உரிய ஆணை வழங்குமாறும் இந்த அரசாணை தெரிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகளை நடத்த நகர விற்பனைக் குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு மண்டல, வார்டு அளவில் நடைபெறும் ஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இடப்பற்றாக்குறை உள்ளபோது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு அருகில் விற்பனைக்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலும் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமையை இந்த அரசாணை வழங்கியுள்ளது.


Next Story