கர்ப்பிணி மாணவி திடீர் சாவு


கர்ப்பிணி மாணவி திடீர் சாவு
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணி மாணவி திடீர் சாவு

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் மல்லிகா. இவருடைய மகள் வித்தியா (வயது21). 5 மாத கர்ப்பிணி ஆவார். இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி, அங்குள்ள பி.பி.ஜி. கல்லூரியில் பி.எட் படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று விடுதியில் தங்கி இருந்த வித்தியா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். உடனே அவரது தோழி அவரை சிகிச்சைக்காக அந்த பகுதியில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை அருகில் குரும்பபாளையத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story