20 மாத்திரைகளை தின்று கர்ப்பிணி தற்கொலை முயற்சி


20 மாத்திரைகளை தின்று கர்ப்பிணி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 3:36 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறு காரணமாக 20 தூக்க மாத்திரைகளை தின்று கர்ப்பிணி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் கணவர், மாமியாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டி மகாதேவபுரத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 34). இவரது மனைவி மஞ்சுளா (27). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு திருமணம் நடந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது மஞ்சுளா 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் சங்கர் கணேசின் தாய் அவரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை கணவரும் தட்டி கேட்காததால் அவர் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் மஞ்சுளா வீட்டில் இருந்த சுமார் 20 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து மயங்கி கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

முதற்கட்ட விசாரணையில் மாமியார் அடிக்கடி மஞ்சுளாவிடம் காரணம் இல்லாமல் திட்டி வந்ததாகவும், அதை கணவரும் தட்டி கேட்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கணவர், மாமியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story