கம்பம் பகுதியில் காய்ச்சல் பரவல்:அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வருகை அதிகரிப்பு:ஊசி போடக்கூடாது என்று டாக்டர் அறிவுறுத்தல்


கம்பம் பகுதியில் காய்ச்சல் பரவல்:அரசு மருத்துவமனையில் நோயாளிகள்  வருகை அதிகரிப்பு:ஊசி போடக்கூடாது என்று டாக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

கம்பம் பகுதியில் காய்ச்சல் பரவல் காரணமாக அரசு மருத்துவமனையில் நோயாளிகளிள் வருகை அதிகரித்துள்ளது.

தேனி

கம்பத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநோயாளிகள் பிரிவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு தொண்டை வலி, உடல் வலி, சளி, இருமல், உடலில் அதிகளவு வெப்பம் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

இதுகுறித்து கம்பம் அரசு மருத்துவமனை டாக்டர் அபு கூறுகையில், பொதுவாக பருவநிலை மாற்றத்தின் போது வைரஸ் காய்ச்சல் பரவுவது இயல்புதான். இந்த காய்ச்சல் 3 நாட்கள் தொடர்ந்து இருக்கும், காய்ச்சலுக்கு ஊசி போட கூடாது, டாக்டர் பரிந்துரையின் பேரில் மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆவி பிடித்தல், காய்ச்சல் அதிகரிக்கும் போது உடலில் உள்ள வெப்பத்தை குறைக்க ஈர துணியை வைத்து துடைக்க வேண்டும் 3 நாட்களுக்கு பிறகும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தற்போது வரை கம்பம் பகுதியில் யாருக்கும் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றார்.


Next Story