தக்காளி, சின்னவெங்காயம் விலை அதிகரிப்பு


தக்காளி, சின்னவெங்காயம் விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 31 July 2023 12:30 AM IST (Updated: 31 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பெரியநாயக்கன்பாளையம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் தக்காளி விலை அதிகரித்து உள்ளது.

கோயம்புத்தூர்
பெரியநாயக்கன்பாளையம்


பெரியநாயக்கன்பாளையம் வாரச்சந்தையில் கடந்த ஒரு மாதமாக காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த வாரம் ரூ.70 -க்கு விற்ற ஒரு கிலோ சின்ன வெங்காயம் நேற்று ரூ.85-க்கு விற்றது. ரூ.100-க்கு விற்ற தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது. இது போல் மற்ற காய்கறிகளின் விலை (ஒரு கிலோ) வருமாறு:-


பெரிய வெங்காயம் ரூ.30, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிபிளவர், பீட்ரூட் ஆகியவை ரூ.40, புடலங்காய் ரூ.45, முருங் கைக்காய் ரூ.38, வெண்டைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய் ஆகியவை ரூ.60, பீன்ஸ் ரூ.70, கேரட் ரூ.64, அவரைக்காய் ரூ.74, அரசாணிக்காய், பூசணிக்காய், சுரைக்காய் ஆகியவை ரூ.25-க்கு விற்பனை ஆனது.

சந்தைக்கு வரத்து குறைந்ததால் காய்கறி விலை அதிகரித்து உள்ளது. இதனால் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கூறினர்.



Next Story