பூசாரிகள் மாவட்ட மாநாடு


பூசாரிகள் மாவட்ட மாநாடு
x
சேலம்

தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் 18-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சேலம் மாவட்ட மாநாடு சேலம் டவுன் வாசவி மகாலில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பி.வாசு தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர், மாநில துணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநாட்டில், கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது. இதனை நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வருமானம் இல்லாத கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்துவதோடு அங்கு திருத்தேர் உருவாக்கி தேரோட்டம் ஆண்டுதோறும் நடத்த வேண்டும். மேலும், ஆடித்திருவிழாவில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று பூமிதிவிழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும், கோவில் பூசாரிகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story