ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடக்க கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். தொடக்க கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் மீனாட்சி சுந்தரம், நகர தலைவர் கோமதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மரிய அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் கணேசன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் மாரிமுத்து, தென்காசி கல்வி மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், நகர செயலாளர் முருகேசன், வட்டார பொருளாளர் ஹெலன் மேரி கிறிஸ்டி பாய் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகரப் பொருளாளர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.