தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி:-
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு தொடக்கப்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளை சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அருண்பிரகாஷ்ராஜ் தலைமை தாங்கினார். ஓய்வுப் பிரிவு மாவட்டத் தலைவர் ரங்கப்பன், முன்னாள் மாவட்டத் தலைவர் சின்னசாமி, ஓய்வுப் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயஆரோக்கியசாமி, முன்னாள் மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், ஓய்வுப் பிரிவு மாவட்ட பொருளாளர் திம்மராயன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் அமலோற்பவமேரி ஆகியோர் போராட்ட விளக்கவுரை ஆற்றினார்கள். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாநில துணை செயலாளர் பழனி ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரை ஆற்றினர். மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.