தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூர் பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (தொடக்கக் கல்வி), வட்டார கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் எழில் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.


Next Story