ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்

தோகைமலை வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பு நேற்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தோகைமலை வட்டார தலைவர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காளிதாஸ் முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக குளித்தலை கல்வி மாவட்ட செயலாளர் ராமராஜ் கலந்து கொண்டு பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story