ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். 1.1.2022 முதல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு உடன் வழங்கிட வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் வட்டாரம் மற்றும் கரூர் நகரம் (கிளைகள்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் வட்டார தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். இதில் கரூர் வட்டார செயலாளர் அருள்குழந்தை தேவதாஸ், நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story