பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுடன் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு


பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுடன் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு
x

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் 8 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார்.

சென்னை,

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாள் அரசுமுறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனத் தெரிகிறது. முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினின் இந்த பயணம் மூலம் பல்வேறு தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஸ்பெயின் செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்துள்ளார். விமானத்தில் வைத்து ஜோகோவிச்சை சந்தித்ததாக தனது எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


Next Story