டிடி தமிழ் சேனலின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


டிடி தமிழ் சேனலின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
x

டிடி பொதிகை சேனல் டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பு துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் டிடி தமிழ் சேனலின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டிடி பொதிகை சேனல் டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 8 மாநிலங்களில் 12 ஆகாசவாணி பண்பலை ஒலிபரப்பு கோபுரங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். ஜம்மு -காஷ்மீரில் 4 தூர்தர்ஷன் ஒளிபரப்பு கோபுரங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.


Next Story