பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி


பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி
x

பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என திருமயத்தில் நடந்த பாதயாத்திரையின்போது அண்ணாமலை பேசினார்.

புதுக்கோட்டை

பாதயாத்திரை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் பாத யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கினார். தொடர்ந்து இன்று 6-வது நாளில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பாத யாத்திரை மேற்கொண்டார். காரைக்குடியில் இருந்து வந்த அண்ணாமலைக்கு தேசிய நெடுஞ்சாலையில் கடியாப்பட்டி முக்கத்தில் கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 10.30 மணிக்கு யாத்திரையை தொடங்கி திருமயம் பஸ் நிலையம் வரை அவர் நடந்து வந்தார்.

ஆங்காங்கே நின்றவர்களை பார்த்து இருகரம் கூப்பி வணக்கம் வைத்தப்படி நடந்தார். அவருடன் கட்சியினரும் நடந்து வந்தனர். வருகிற வழியில் சாலையின் இருபுறமும் பொதுமக்களை அண்ணாமலை சந்தித்து பேசினார். பெண்கள் முளைப்பாரி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்றனர். பெருமாள் கோவில் அருகே ஜல்லிக்கட்டு காளைகள், வண்டி மாடுகள் நிறுத்தப்பட்டிருந்ததை அவர் பார்வையிட்டு காளைகளை தடவி கொடுத்தார். பொதுமக்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

சிற்ப கலைக்கூடம்

திருமயம் பஸ் நிலையத்தில் பேசிய பின் லேணா விளக்கில் பழனிசாமி என்பவரது சிற்பங்கள் தயாரிக்கும் கலைக்கூடத்தை அண்ணாமலை பார்வையிட்டார். அவரிடம் தொழில் பற்றி கேட்டறிந்ததோடு, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக திருமயம் பஸ் நிலையத்தில் வேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:-

ஜல்லிக்கட்டிற்கும், காளைகளுக்கும் பெயர் பெற்றது திருமயம். ஜல்லிக்கட்டிற்கு தி.மு.க.வும், காங்கிரசும் தடையை ஏற்படுத்தினார்கள் என்பது தெரியும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டது. இன்று ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டாக நடைபெற காரணம் பிரதமர் மோடி தான்.

கடன் வாங்கியதில் முதல் இடம்

இன்று இந்த தொகுதியில் தி.மு.க.வின் அமைச்சராக இருக்க கூடியவர் ரகுபதி அவருக்கு சட்டம், நீதிமன்றம், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சராக பதவி கொடுக்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற அமைச்சர் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சராக பதவி வகிக்கிறார்.

தமிழகம் கடன் வாங்கியதில் இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக மாறி உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3-வது இடத்தில் இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் 27 மாதங்களில் இந்தியாவில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி இருக்கிறது. மொத்தம் ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் உள்ளது.

மத்திய அரசின் பணத்தை...

தமிழகத்தில் இருக்க கூடிய ஒவ்வொரு குடும்ப தலைவரின் மீது ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது. இது தான் திராவிட மாடலின் ஆட்சி. 5,500 டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.43 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. பெண்களுக்கு வரக்கூடிய பணம் மது ஆலைகளுக்கு செல்கிறது. மது ஆலைகளின் உரிமையாளர்களான தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு தான் லாபம் வருகிறது. பெண்களுக்கு மாதம், மாதம் ரூ.1,000 கொடுப்பதில் 27 மாதங்களுக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு பட்டியலின மக்களுக்கான திட்டங்களுக்காக கொடுக்கும் ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருக்கின்றனர். மத்திய அரசின் பணத்தை திருப்பி விட்டு ரூ.1,000 கொடுப்பதாக கூறுகின்றனர்.

வேலைவாய்ப்பு

5 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு கொடுப்போம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறினர். ஆனால் 27 மாதத்தில் 2 ஆயிரம் பேருக்கு கூட அரசு வேலை கொடுக்கவில்லை. பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு கொடுப்போம் என கூறினார். இதுவரை 5½ லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்பட்டு பிரதமர் மோடி சொன்னதை போல 10 லட்சம் இளைஞர்கள் மத்திய அரசு பணியில் இருப்பார்கள்.

பொருளாதாரத்தில் வளர்ச்பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என திருமயத்தில் நடந்த பாதயாத்திரையின்போது அண்ணாமலை பேசினார்.சி

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக நீங்கள் தான் அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும். 2014-ம் ஆண்டு ஒரு இந்தியனின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.86 ஆயிரம் இருந்தது. 2023-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. அதனால் தான் பொருளாதாரத்தில் இந்தியா 11-வது இடத்தில் இருந்ததில் இன்று 5-வது பெரிய நாடாக மாறியிருக்கிறது. பிரதமர் மோடியை எதிர்த்து ஒரு கூட்டணி அமைத்துள்ளனர். அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்? என கேட்டால் பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர் என கூறுகின்றனர். வருகிற எம்.பி. தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். பிரதமர் மோடி 3-வது முறையாக உறுதியாக ஆட்சி அமைப்பார். தமிழகத்தில் இருந்து 40 எம்.பி.க்களை அனுப்பி வைக்க வேண்டும். அதற்காக தான் இந்த யாத்திரை.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அண்ணாமலை வழங்கினார்.


Next Story