பிரதமர் மோடி பிறந்த நாள் விழா


பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
x

செங்கோட்டையில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகர அனைத்து விஸ்கர்மா சமுதாயம் சார்பில், விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி செங்கோட்டை குண்டாற்று அக்கசாலை விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னா் வம்பளந்தான் முக்கு, வெற்றி விநாயகர் தெற்கு தெரு, கல்லுபட்டறை உள்ளிட்ட பகுதிகளில் சமுதாய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.

இரவில் கண்ணாசி முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விஸ்வகர்மா சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோட்டை நகர விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை விஸ்வகர்ம சமுதாய நிர்வாகிகள் செய்து இருந்தனா்.

1 More update

Related Tags :
Next Story