பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா


சோளிங்கரில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா நடைபெற்றது. நகர தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பிறமொழி பிரிவு சீனிவாசன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சீனிவாசன் வரவேற்றார்.

தொடர்ந்து கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் பெருமாள், கார்த்தி, நிர்வாகிகள் கோமதி சீனிவாசன், சுமங்கலி, தயாளன், கவிஞர் ஞானம், மணிமாறன், ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story