இன்று முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்
இன்று முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வருகிற அக்டோபர் 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற உள்ள 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் இன்று(வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் www.dge.tn.go.in என்ற இணையதளத்தின் மூலமாக தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் ஹால் டிக்கெட் என்ற வாசகத்தை தேர்வு செய்தால் அதில் இ.எஸ்.எல்.சி. அக்டோபர் 22 எக்ஸாமினேஷன் என்ற தலைப்பின் கீழ் உள்ள நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு அனுமதி சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story