'அம்ரீத்பாரத்' திட்ட பணிகள் குறித்து முதன்மை பொறியாளர் ஆய்வு


அம்ரீத்பாரத் திட்ட பணிகள் குறித்து முதன்மை பொறியாளர் ஆய்வு
x

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ‘அம்ரீத்பாரத்’ திட்ட பணிகள் குறித்து முதன்மை பொறியாளர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் 'அம்ரீத் பாரத்' ரெயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரெயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. இதன்படி ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சென்னை கோட்டத்தில் கிண்டி, மாம்பலம், சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், செயின்ட் தாமஸ் மவுன்ட், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டை, ஜோலார்பேட்டை உள்ளிட்ட 15 ரெயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ெரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்த அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்ட பணிகளை வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில் அதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பொறியாளர் டி.ஆர்.குப்தா, சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story