3 வாலிபர்களுக்கு தலா 6 ஆண்டு சிறை


3 வாலிபர்களுக்கு தலா 6 ஆண்டு சிறை
x

திருப்பூரில் பார் ஊழியரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு தலா 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. சிறப்பாக பணியாற்றிய போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

திருப்பூர்

திருப்பூரில் பார் ஊழியரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு தலா 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. சிறப்பாக பணியாற்றிய போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

திருப்பூர் பழகுடோன் டாஸ்மாக் பாரில் கடந்த மே மாதம் 4-ந் தேதி அடைக்கலம் (வயது 34) மற்றும் அவருடன் வேலை செய்தவர்கள் இரவு 11½ மணிக்கு பாத்திரங்களை கழுவிக்கொண்டு இருந்தனர். அப்போது கருவம்பாளையத்தை சேர்ந்த ஜெயராம் (22), மணிகண்டன் (23), தேவசரண் (24) ஆகியோர், அடைக்கலத்திடம் தகராறு செய்து கீழே கிடந்த மதுபாட்டிலால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 5-ந் தேதி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

சம்பவம் நடந்து 5 நாட்களில் புலன் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்து கோர்ட்டில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முறையாக சாட்சிகளையும், சாட்சியங்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 33 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயராம், மணிகண்டன், தேவசரண் ஆகிய 3 பேருக்கும் தலா 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2 மாஜிஸ்திரேட்டு பழனிகுமார் உத்தரவிட்டார்.

கமிஷனர் பாராட்டு

விரைந்து புலன் விசாரணை முடித்து கோர்ட்டு மூலமாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், போலீசார் யுவராஜ், மருதமுத்து, அசோக், பெண் காவலர் சூர்யகலா, கோர்ட்டு பணி ஏட்டு அகஸ்டியன் ஆகியோர் மெச்சத்தகுந்த பணியாற்றியதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டி வெகுமதி வழங்கினார்.


Related Tags :
Next Story