ஜெயங்கொண்டம் கிளை சிறையில் கைதிக்கு திடீர் நெஞ்சுவலி


ஜெயங்கொண்டம் கிளை சிறையில் கைதிக்கு திடீர் நெஞ்சுவலி
x

ஜெயங்கொண்டம் கிளை சிறையில் கைதிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மைக்கேல்பட்டி கிராமத்தில் புதையல் எடுத்து தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட தியாகம் டேனியல் (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் கொண்டு சென்றனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


Next Story