தனியார் பஸ் டயர் வெடித்தது; டிரைவரின் கை முறிந்தது


தனியார் பஸ் டயர் வெடித்தது; டிரைவரின் கை முறிந்தது
x

தனியார் பஸ் டயர் வெடித்ததில் டிரைவரின் கை முறிந்தது.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையத்தில் இருந்து நேற்று மாலை துறையூர் நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றது. சிக்கத்தம்பூர் அருகே சென்றபோது, அந்த பஸ்சின் முன்பக்க டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையை விட்டு இறங்கி, மண்மேட்டில் வேப்பமரத்தடியில் நின்றது. இந்த சம்பவத்தில் அந்த பஸ்சில் பயணம் செய்த சுமார் 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் சோபனபுரத்தை சேர்ந்த பஸ்சின் டிரைவர் சேகர்(வயது 45) கை முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story