தனியார் கல்லூரி பஸ் கண்ணாடி உடைப்பு


தனியார் கல்லூரி பஸ் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே தனியார் கல்லூரி பஸ் கண்ணாடி உடைப்பு 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருவண்ணாமலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சை அதன் டிரைவரான தொட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 53) என்பவர் மாணவர்களை ஏற்றி செல்வதற்கு வசதியாக தினந்தோறும் திருப்பாலபந்தல் கிராமத்தில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறை அருகே நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வெல்டிங் பட்டறை அருகே நிறுத்தி விட்டு சென்ற கிருஷ்ணமூர்த்தி மறுநாள் காலையில் பஸ்சை ஓட்டிச்செல்வதற்காக வந்தபோது பஸ்சின் முன் மற்றும் பின் பக்க கண்ணாடியை யாரோ மர்மநபர்கள் உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னா் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினா். அப்போது துரிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் முத்தழகன்(24), சக்திவேல் மகன் குழந்தைவேலு(25) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ் கண்ணாடியை உடைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story