மீன்பிடிக்க சென்றவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி


மீன்பிடிக்க சென்றவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி
x

கொளத்தூர் அருகே மீன்பிடிக்க சென்றவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார். அவரது உடல் கரை ஒதுங்கியது.

சேலம்

மேட்டூர்

தனியார் நிறுவன ஊழியர்

மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே மாமரத்துக்காடு பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் பாலமுருகன் (வயது 23). திருப்பூரில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்து இருந்த பாலமுருகன் நேற்று முன்தினம் கோட்டையூரில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கம் பகுதியில் பரிசலில் சென்று மீன் பிடிக்க சென்றார். அப்போது தண்ணீரில் தவறி விழுந்தார்.

உடல் கரை ஒதுங்கியது

இதுபற்றி கொளத்தூர் போலீசார், மேட்டூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பாலமுருகனை தேடினர். அப்படி இருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே நேற்று பாலமுருகன் உடல் கோட்டையூர் பரிசல்துறை பகுதியில் கரை ஒதுங்கியது. கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாலமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தினர்.


Next Story