தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மேலரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வசுந்தர் (வயது 43). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் உடல்நல பாதிப்பு காரணமாக தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story