தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர்
பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பள்ளம் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (22). மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆவடியை அடுத்த வீராபுரம் கன்னியம்மன் நகரை சேர்ந்த கோமதி (24) என்ற என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணை காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு வீராபுரம் நந்தவனம் நகரில் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
தற்கொலை
நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோமதி, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதில் விரக்தி அடைந்த ஜீவானந்தம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று அவருக்கு பிறந்த நாள் ஆகும். பிறந்தநாள் வாழ்த்து கூற காலையில் அவரது வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர் ஜீவானந்தம் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






