கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x

நாங்குநேரியில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 36). இவர் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டு இருந்தார்.

நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி சாலையில் தென்னிமலை அருகே சென்ற போது, எதிரே வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story