தனியார் வேலைவாய்ப்பு முகாம்


தனியார் வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

தென்காசி

புளியங்குடி:

தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 900 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் புளியங்குடி நகரசபை தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், புளியங்குடி நகரசபை துணைத்தலைவர் அந்தோணி சாமி, வேலைவாய்ப்பு இணை இயக்குனர் லட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, திட்ட இயக்குனர் குருநாதன், கல்லூரி சேர்மன் முருகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Next Story