தேனியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்


தேனியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
x

தேனியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது

தேனி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில், 15 நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தங்களின் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். இதில் 135 பேர் பங்கேற்றனர். அவர்களில் 63 பேர் பல்வேறு வேலைகளுக்காக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story