தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு


தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு
x

பண்ருட்டி அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன், பணம் பறித்து சென்ற மா்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் தமிழ்வாணன் (வயது 21). இவா் விருத்தாசலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தமிழ்வாணன், வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கொள்ளுக்காரன்குட்டை சாலையில் கீழக்குப்பம் துணை மின்நிலையம் அருகே வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென தமிழ்வாணனை மறித்தார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் தமிழ்வாணனை சரமாரியாக தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.800-யை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதில் காயமடைந்த தமிழ்வாணனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்ச அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்வாணனிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story