தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை
பிதிர்காடு அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் தாலுகா பிதிர்காடு அருகே சந்தகுன்னு பகுதியை சேர்ந்தவர் லஸ்லி (வயது 45). இவர் கூடலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே அவர் உடல் நலக்குறைவால் பணிக்கு செல்லவில்லை. இதனால் லஸ்லி மன உளைச்சல் அடைந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லஸ்லி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே லஸ்லி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்பலமூலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story