தனியார் வேலை வாய்ப்பு முகாம்


தனியார் வேலை வாய்ப்பு முகாம்
x

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 200 பேருக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பணி ஆணை வழங்கினார்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள பாவை பொறியியல் கல்லூரியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது. முகாமில் தர்மபுரி, வேலூர், திருச்சி, திருப்பூர் உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த 206 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், தட்டச்சர், விற்பனையாளர்கள், கேசியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நேர்காணல் நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட 200 பேருக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பணி நியமன ஆணை வழங்கினார். மேலும் முகாமில் தேர்ச்சி பெற்ற 3 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய ஊன்றுகோல்களை கலெக்டர் வழங்கினார்.


Next Story