"தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது" - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை


தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
x

பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.

கும்பகோணம்,

தமிழகம் முழுவதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அவ்வாறு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story