ஆவடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


ஆவடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர்

இதில் 151 நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான நபர்களை தேர்வு செய்தது. இதில் 1,491 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 138 ஆண்கள், 69 பெண்கள், 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 213 பேருக்கு நேரடி பணி நியமன ஆணைகளை முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் எம்.எல்.ஏ., திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, சி.வெ.கணேசன் ஆகியோர் வழங்கினர். மீதமுள்ள 1,278 பேர் 2-ம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமில் கலந்து கொண்ட ஆயிரம் பேருக்கு ஆயிரம் மஞ்சப் பைகளை அமைச்சர்கள் வழங்கினர். முகாமில் பூந்தமல்லிஎம்.எல்.ஏ, ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, உதவி இயக்குனர் விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story