சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களுடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்த உள்ளது.

சென்னை

சென்னை:

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களுடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நாளை (வெள்ளிக்கிழமை) நடத்த உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற இருக்கிறது.

இதில் 8, 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தின் காலி பணியிடங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story